வாரண முகன்
பல்லவி
அலங்காரமாயமர்ந்து அழகுடன் காட்சி தரும்
நலம் தரும் கணபதியை உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
உலகை உண்டுமிழ்ந்த கேசவன் மருகனை
மலைமகள் மைந்தனை ஆனைமுகத்தோனை
சரணம்
நிலவின் கலையணிந்த வாரணமுகனை
கலைமகள் அலைமகள் நேசிக்கும் கரிமுகனை
உலகனைத்தும் போற்றும் விக்ன விநாயகனை
மலர் தூவியெனையாள வேண்டுமெனப் பணிந்து
No comments:
Post a Comment