கலியுகத்தெய்வம்
பல்லவி
கண்ணனே கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்
அனுபல்லவி
விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் துதித்திடும்
தண்மதி முகத்தினன் மாமாயன் கேசவன்
சரணம்
வண்ணமயில் பீலியும் மரகதச் சுட்டியும்
கொண்டையில் சூடி மாலைகளணிந்து
தண்டையும் கொலுசும் கால்களில் பூட்டி
வெண் பட்டுடுத்தி அழகுடன் மிளிரும் ( கண்ணனே ....)
வெண்ணை பால் தயிர் விரும்பி உண்ணும்
மண்ணையுண்ட வாயன் பங்கய நாபன்
கண் கவரழகன் கோபியர் லோலன்
பண்ணிசைத்து குழலில் பரவசம் காட்டிடும் ( கண்ணனே )
உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் அனைத்துமவனே
எண் திசையும் ஏழுலகும் ஞாயிறும் திங்களும்
அண்டசராசரங்களனைத்துமவனே ( கண்ணனே )
No comments:
Post a Comment