மோதகப்பிரியன்
பல்லவிதேவாதி தேவனை மகாகணபதியை
நாவாரப்பாடி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
மாவாய் பிளந்த கேசவன் மருகனை
தேவானை மணவாளன் குமரன் சோதரனை
சரணம்
மூவாசைப் பிணிபோக்கும் முன்வினைப் பயன் நீக்கும்
ஓங்கார வடிவினனை மோதகப்பிரியனை
மாவிடை வாகனன் மகனைக் கரிமுகனை
பூவுலகோர் போற்றும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment