கரிமுகன்
பல்லவி
தினமொரு விதமாகக் காட்சி தரும் கணபதியை
அனாத நாதனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஜனன மரண பயம் போக்கிடும் கரிமுகனை
வினையிடர் களைந்திடும் விக்ன விநாயகனை
சரணம்
அனந்த சயனன் கேசவன் மருகனை
அனல் புனலேந்திய நெற்றிக் கண்ணன் மகனை
வனவிலங்கெனத் திரியும் புலன்களை அடக்கவும்
மனமொரு நிலைபெறவும் அவனருள் வேண்டி
No comments:
Post a Comment