முழுமுதற்கடவுள்
பல்லவி
என்ன சொல்லி உன்னைத் துதிப்பேன்
பன்னகாபரணன் மகனே கணபதியே
அனுபல்லவி
பொன்னடி பணிவதன்றி வேறொன்றறியேன்
சென்ன கேசவன் மருகனே கரிமுகனே
சரணம்
அன்னையும் தந்தையுமே அகிலமனைத்துமென
முன்னமுணர்த்திய முழுமுதற் கடவுளே
சின்னஞ் சிறியேன் செய்த பிழை பொறுத்து
இன்னருள் தந்தெனை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment