விநாயகன்
பல்லவி
தாயும் தந்தையுமே உலகமென்றுணர்த்திய
சேயவனை கணபதியை மனமாரத் துதித்தேன்
துரிதம்
ஞாயிறும் திங்களும் நந்தியும் கணங்களும்
தேவரும் மூவரும் யாவரும் பணிந்திடும்
அனுபல்லவி
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
நேயமுடன் நமக்களிக்கும் ஆனைமுகத்தோனை
சரணம்
தூய வெண்கலையுடுத்தும் விக்ன விநாயகனை
தேயும் பிறையணியும் தேவாதி தேவனை
மாயப்பிறப்பறுக்கும் மதவாரணமுகனை
மாயன் கேசவன் மருகனைக் கரிமுகனை
No comments:
Post a Comment