சித்தி விநாயகன்
பல்லவி
புத்தாடை உடுத்திய சித்தி விநாயகனை
அத்தன் சிவன் மகனை கரம் கூப்பித் துதித்தேன்
அனுபல்லவி
முத்தமிழைக் கலைகளை ரசித்திடும் கரிமுகனை
தத்துவப் பொருளை கேசவன் மருகனை
சரணம்
மத்தாடும் தயிர்போலத்தத்தளிக்கும் சித்தத்தை
சத்தமின்றி ஒருநிலை அடைந்திடச் செய்திடவும்
நித்தமுமவன் பதம் புத்தியில் நிலைத்திடவும்
உத்தமிப் புதல்வனை மகா கணபதியை
No comments:
Post a Comment