குழலோன்
பல்லவி
குழலாக உன் கையில் நானாக வேண்டும்
அழகா உன்னதரங்கள் எனைத்தீண்ட வேண்டும்
அனுபல்லவி
குழலில் நீயணிகின்ற அழகு மயிலிறகோ
கழல் சூடும் தண்டைகளோ ஆனாலும் போதும்
சரணம்
மழை மேக நிறம் கொண்ட நீலவண்ணக்கண்ணா
நிழலுந்தன் கழலடியே திருமாலே கேசவா
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
அழகனே உனதிரு மலர்ப் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment