மணக்குள கணபதி
பல்லவிகணபதிராயனை அனுதினம் துதித்தேன்
வணங்கிடுமெனையே காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
தணலேந்தும் முக்கண்ணன் சங்கரன் மகனை
கணங்களின் அதிபதியை கேசவன் மருகனை
சரணம்
இணை தனக்கொருவரும் இல்லாத இறைவனை
குணம் கல்வி செல்வம் அளித்திடும் கரிமுகனை
துணை நின்று அடியவர் இடர் வினை களைபவனை
மணக்குளம் பதிதன்னில் வீற்றிருப்பவனை
No comments:
Post a Comment