சுமுகன்
பல்லவி
அழகிய கணபதியை ஆனைமுகத்தோனை
கழலடி நிழலே சதமெனத் துதித்தேன்
அனுபல்லவி
மழுவேந்தும் முக்கண்ணன் மகனைக் கரிமுகனை
குழலோன் கேசவன் நேசனை சுமுகனை
சரணம்
உழன்று திரியுமென் மனமொரு நிலைபெறவும்
பழவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கவும்
மழை நிற மேனியன் அவனருள் வேண்டி
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
No comments:
Post a Comment