கதி நீயே கேசவா
பல்லவி
நீயன்றி வேறு யார் எனை ஆட்கொள்வார்
ஓயாதுனையே துதித்தேன் கேசவா
அனுபல்லவி
தாயும் தந்தையும் குருவும் தோழனும்
நீயே என்றுன் திருவடி பணிந்தேன்
சரணம்
காயம் சதமென கருதியே நாளும்
மாயையில் மூழ்கி மனம் களித்திருந்தேன்
நோயெனும் வெம்பவச்சுழலில் விழுந்தேன்
மாயனே மனம் திருந்தி உனைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment