கண்ணன்
பல்லவி
பங்கயனாபன் பதமலர் பணிந்தேன்
சங்கும் சக்கரமும் கைகளிலேந்திடும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் செங்கண்மால் கேசவன்
சங்கரனும் மோகம் கொண்ட மோகினி வடிவினன்
சரணம்
மங்கை திருமகளைத் தன் மார்பில் தாங்கும்
வெங்கடரமணன் திருமலை வாசன்
தங்கு தடையின்றி தருமம் தழைக்கவே
இங்கு எழுந்தருளி நம்மைக் காத்திடும்
No comments:
Post a Comment