ஒருகை அவலுடன் உருட்டிய வெண்ணெய்
தரமாய் செய்தநல் தட்டையும் முறுக்கும்
அரிச்சீ டையுடன் ஐவகை இனிப்பும்
இருக்கை யிலேனடா இன்னுமிக் கள்ளம்
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணையும்
மெத்தத் திருவயிறார விழுங்கிய
அத்தன் வந்தென்னைப் புறம்புல்குவான்
ஆழியானென்னைப் புறம்புல்குவான்
மண்ணையுண்ட வாயனை……
பல்லவி
மண்ணையுண்ட வாயனை மாமாயன் கேசவனை
பண்ணிசைத்துப்பாடி உளமாறத் துதித்தேன்
அனுபல்லவி
எண்ணம் முழுதும் அவனையே நினைத்தேன்
கண்ணிலவன் செய்த லீலைகளே கண்டேன்
சரணம்
வெண்ணை ஒரு உருண்டையும் கைப்பிடி அவலும்
எண்ணையில் பொரித்த முறுக்கும் தட்டையும்
கண்ணைக் கவருமினிப்பும் சீடையும்
திண்ணமுற உண்ட கண்ணனென் புறம்புல்குவான்
No comments:
Post a Comment