பலன் கருதாமலே….
பல்லவி
பலன் கருதாமலே நாம மோதும் பக்தனுக்கு
நலமளிக்கும் தேவியே உன்னைத்துதித்தேன்
அனுபல்லவி
தலங்களுள் சிறந்த காஞ்சிமா நகருறை
உலகம் போற்ற வீற்றிருக்குமன்னையே
சரணம்
நிலம் நீர் நெருப்பு காற்று வெளியாகி
அலகிலா விளையாடல் பல புரிபவளே
அலங்காரப்பிரியன் கேசவன் சோதரியே
லலிதாம்பிகையே ஶ்ரீ காமாக்ஷி
யாருக்கு தேவி வசப்படுவாள்?
பதிவர் ஞானவேல் அங்கப்பன். அவர்களுக்கு நன்றிகள்.
நாம் கேட்டதெல்லாம் கிடைத்தபொழுது இருக்கும் நம்பிக்கையைவிட, ஒரு விஷயம் கிடைக்காதபோது இருக்கும் நம்பிக்கையே விசேஷமானது. அதுவே நிலையான நம்பிக்கை.
நீ எதை செய்தாலும் அது என்னுடைய உயரிய நன்மைக்கே என்ற மனபக்குவதுடன் தேவியை பற்றிக்கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் கண்டிப்பாக தேவி அனுக்கிரஹம் பண்ணுவாள்.
ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நாம் கேட்டு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அவளுக்கு கொடுக்கும் வல்லமை இல்லை என்று அர்த்தம் இல்லை. அவளால் கொடுக்க முடியாதது இந்த மூவுலகிலும் இல்லை.
கேட்டது கிடைக்கவில்லை என்றால் நாம் கேட்டதைவிட உத்தமமான ஒன்றை நமக்கு தரப்போகிறாள் என்று அர்த்தம்.
நாம் கேட்டதைவிட அதிகமாக தருவாள், நமக்கு கேட்க தெரியாத உயரிய விஷயங்களையும் கேட்காமலேயே அள்ளி தருவாள் தேவி.
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து பூஜிப்பவனுக்கு கோரிய பயன் கிடைக்காவிட்டால் அவனுடைய நம்பிக்கை தேய்ந்துப்போகும் . அவளுடைய அன்பிற்காக மட்டும் உருகி உருகி நித்தம் பூஜிப்பவனுக்கு கேட்டது கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, அவனுடைய பக்திக்கும், நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் ஒரு பொழுதும் தேய்மானம் என்பதே கிடையாது. அப்பேற்பட்ட பக்தனுக்கு மட்டுமே தேவியானவள் வசப்படுவாள்
யார் அவளுடைய அன்புக்கு பாத்திரமாகிறாரோ அவர்களுக்கு குறைவில்லா வரங்களை அள்ளித்தருவாள்.
அதற்கு முன்பு அவள் வைக்கும் லிட்மஸ் சோதனை ' litmus test' தான் இந்த 'waiting period'.
No comments:
Post a Comment