நாலாயிர திவ்ய பிரபந்தம்
மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே".
விளக்கம் :
குரங்குகளானவை ஒரு கிளையில் நின் றும் மற்றொரு கிளையில் பாயப்பெற்ற வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே நித்யசூரிகள் பூக்களைக் கொண்டு வந்து ஆராதிக்கும்படி நிற்பவ னாய் கோயிலிலே திருவனத்தாழ்வானா கிற போக்யமான படுக்கையையுடைய னான அழகிய மணவாளனுடைய செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீ தாம்பரமும் அப்பீதாம்பரத்தின் மேலே பிரமனைப்படைத்த ஒப்பற்ற அழகையு டைய திருநாபிக்கமலமும் ஆகிய இவற் றின் மேற்படிந்ததன்றோ என்னுடைய மனதிலே விளங்குகின்ற இனிதான ஆத்மஸ்வரூபம். ஓம் நமோ நாராயணாய....
மந்திகள் பாயும்…..
பல்லவி
மந்திகள் பாயும் வடவேங்கட மாமலை மேல்
வந்தனையேற்று நிற்கும் மலையப்பனைத்துதித்தேன்
அனுபல்லி
அந்தி போல் நிறத்தாடையணிந்தரவணை மேல் துயிலும்
உந்தி கமலனை அரங்கத்தம்மானை
சரணம்
இந்திராதி தேவர்களும் சுகசனகாதியரும்
சந்திர சூரியரும் பிரமனுமனங்கனும்
வந்தனை புரிந்திடும் கேவனை மாதவனை
சிந்தையில் வைத்து சீரடி போற்றி
No comments:
Post a Comment