இன்றைய திவ்ய ஸேவை....
திரு அல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரத்னாங்கி ஸேவை...
கற்றிலேன் கலைகள்;
ஐம்புலன் கருதும் கருத்துளே
திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால்
பேதையேன் நன்மை; பெரு
நிலத்தாருயிர்க்கெல்லாம்
செற்றமே வேண்டித்
திரிதருவேன்; தவிர்ந்தேன்;
செல்கதிக்கு உய்யுமாறெண்ணி
நல்துணையாகப் பற்றினேன்
அடியேன் நாராயணா
என்னும் நாமம்.. __திருமங்கை ஆழ்வார்
முனைப்புடன் துதித்தேன்…..
பல்லவி
முனைப்புடன் துதித்தேன் கேசவனே உன்னை
எனையாட்கொள்ள வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
வினைப்பயனால் கட்டுண்டு இவ்வுலகிலுழன்றேன்
உனை நினையாமலே வீணிலலைந்தேன்
சரணம்
உனைத்துதிக்கும் கலைகளேதும் கற்றவனில்லை
எனையாட்டுவிக்கும் புலன்வழியே சென்றேன்
தினையளவும் நற்செயல் புரியாமல் திரிந்தேன்
அனைத்தும் நாராயணனே என்றறிந்த பின்னே
No comments:
Post a Comment