கானம் தனில்…..
பல்லவி
கானம் தனில் மகிழும் சிவனுனைத் துதித்தேன் — சாம
அனுபல்லவி
மோனத்தவம் செய்யும் முனிவரும் ஞானியரும்
வானுறை தேவருமிந்திரனும் வணங்கிடும்
சரணம்
ஆனிறைகள் மேய்த்த கேசவன் நேசனை
மான் மழுவேந்திய தேனுபுரீச்வரனை
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கவும்
ஞானம் பெறவும் பவபயமகலவும்
துரிதம்
பானுவும் நிலவும் நந்தியும் கணங்களும்
தேனுவும் மறைகளும் கரம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment