கதி நீயே தாயே…..
பல்லவி
கதி நீயே தாயே கழலிணை தொழுதேன்
மதி சேகரன் மனையே மாதங்கியே உமையே
அனுபல்லவி
விதியையும் காத்தருளும் கேசவன் சோதரியே
கதிரொளியின் காந்தியைப் பழிக்கும் தேசுடையவளே
சரணம்
புகழ் பதவி ஆஸ்திகளெதுவும் தேவையில்லை
இகழ்வில்லா வாழ்வும் இருக்க ஓரிடமும்
சகந்தனிலாரோக்கியமும் தந்தாலே போதும்
மகிழ்வுடனுனைப் போற்றி வாழ்ந்திடுவேனன்னையே
No comments:
Post a Comment