சக்தியே உந்தன ….
பல்லவி
சக்தியே உந்தன் மலர்ப் பதம் பணிந்தேன்
பித்தன் மனையாளே கேசவன் சோதரியே
அனுபல்லவி
முக்தி பெற உந்தன் தாள் பணிவதன்றி
உக்தி உபாயம் வேறறியேனதனால்
சரணம்
சக்தி நீயே கதியென உன்னை
பக்தியுடன் துதிக்கும் பக்தருக்கெல்லாம்
நற்கதி நல்கிடும் அன்னையே பரமேச்வரி
உத்தமியே கௌரி உமாமகேச்வரி
No comments:
Post a Comment