தாமதியாமலெனக்கருள்வாயே…..
பல்லவி
தாமதியாலெனக்கருள்வாயே
கோமதித்தாயே உனையே துதித்தேன்
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் சோதரி
மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி
சரணம்
காமக்ரோதாதி அறுபகையகல உன்
நாமமே துணையெனப் போற்றி வணங்கினேன்
பூமண்டலம் போற்றும் புவனேச்வரியே
தேமதுரத் தமிழால் பாமாலை சூட்டினேன்
பூமலர் மாலையும் தங்கப்பாவாடையும்
சேமமுடனணிந்து காட்சி தருபவளே
காமேச்வரியே ஆடித்தவமிருப்பவளே
ஓமெனும் மந்திரப்பொருளானவளே
சோமசுந்தரர் சிவபெருமானும்
வாமனமூர்த்தி நாராயணனும்
பூமியில் சங்கர நாராயணனாக
எழுந்தருளச் செய்த சங்கரி நீயே
No comments:
Post a Comment