புதுப்பாடல் உனைப்போற்றி…..
பல்லவி
புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட வரமருள்வாய்
மதுரகாளியே கேசவன் சோதரியே
அனுபல்லவி
எதுகை மோனையுடன் இலக்கணமும் சேர்ந்து
மதுரத்தமிழில் சொற் பொருள் நயத்தோடு
சரணம்
விதம் விதமான அலங்காரம் புனைபவளே
திங்கள் வெள்ளியில் மட்டும் காட்சி தருபவளே
மதுர மொழியாளே மாவிளக்கேற்பவளே
சிறுவாச்சூர் தலத்துறையும் மாகாளி பைரவியே
No comments:
Post a Comment