Saturday, 30 September 2023

தினசரி உனையே…..


பச்சப்புள்ள சிரிப்பா...

மலர்ந்து கிடக்கிற வாசப்பூவா ...

நெறஞ்சு ஓடற ஆத்து நீரா ...

நிக்காம பறக்குற மேகமா...

அசையாம நிக்குற மலையா ...

தெரிஞ்சு மறையற வானவில்லா ...

எம்மனசுக்குள்ள விழுந்து கிடக்கற 

என் தாயே சரணமம்மா...

    

                                                    தினசரி உனையே…..


                                                            பல்லவி

                                  தினசரி உனையே துதித்தேன் ஶ்ரீலலிதாம்பிகையே யென்

                                  மனசுக்குள் மலர்ந்த தாயுனையே சரணடைந்தேன்

                                                           அனுபல்லவி

                                   அனந்தபத்மநாபன் கேசவன் சோதரியே

                                   உனதருளாலன்ளோ உலகனைத்தும் நடக்கிறது

                                                            சரணம்

                                   நில்லாமலோடும் மேகமோ நீ இல்லை

                                   செல்லாமல் நிலைத்து நிற்கும் மாமலையோ

                                   அல்லது பிள்ளை முகத்திலுள்ள கள்ளச் சிரிப்போ

                                   முல்லை மலரோ தோன்றி மறையும் வானவில்லோ  


திருவடி சரணடைந்தால்….

 படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!



   திருவடி சரணடைந்தால்….  


                      பல்லவி


திருவடி சரணடைந்தால் துன்பங்கள் பறந்து போகும்

அருள் தரும் திருமால் கேசவனவனிரு


                 அனுபல்லவி


பெருமைகள் பல நிறைந்த ஶ்ரீமன் நாராயணன்

இருவினைப் பயன் நீக்கும் கருணைக்கடலவன்


                   சரணம்


தருமநெறி காக்க தரணியிலுதித்தவன்

அருமாகடலமுதன் ஆதிவராகன்

குருபவனபுரத்துறையும் குருவாயுரப்பன்

பெரும்பிணி பவக்கடல் கடந்திடச்செய்யுமவன்

                      *****


துதித்தேன் உனையே……

 


                                     துதித்தேன் உனையே……

 

                                           பல்லவி

                            துதித்தேன் உனையே சென்ன கேசவா

                            விதிப் பயன் நீக்கி எனக்கருள் புரிவாய்

                                         அனுபல்லவி

                            கதி நீயென்றே கழலிணை பணிந்தேன்

                            மதியையும் மிஞ்சும் முகப்பொலிவுடையவனே

                                             சரணம்

                             உதிக்கின்ற கதிரவனின் ஒளியைப் பழிப்பவனே

                             அதிகோர அரக்கர்களை பூண்டோடழிப்பவனே

                             இதிகாச புராணங்கள் போற்றும்

                             யதுகுல திலகனே புரந்தர விட்டலனே                       

                                

Thursday, 28 September 2023

நிரந்தரம் நீயே……

 


                                           நிரந்தரம் நீயே……


                                                 பல்லவி

                                நிரந்தரம் நீயே பரம்பொருளே கேசவா

                                பரமபதநாதனே பாற்கடல் வாசனே

                                                  துரிதம்

                                அரனயனிந்திரன் நரர் சுரர் நாரதர்

                                கரம் பணிந்தேத்தும் நாராயணனே

                                              அனுபல்லவி

                                கரங்களில் சங்கும் சக்கரமுமேந்திடும்

                                பரவாசுதேவனே அரவிந்த நாபனே 

                                                  சரணம்

                                கரன் முரனை வதைத்தவனே பரசுபாணியே

                                அரவணை மீதுறங்கும் உரகமெல்லணையானே

                                இரணியனை வதம் செய்த ஶ்ரீநரசிம்மனே

                                முரளீதரனே முகுந்தனே மாயோனே                                 

                                

                                  

Wednesday, 27 September 2023

#நனென்ன #செய்வேன்…..

 #நனென்ன #செய்வேன்…..


            பல்லவி

நானென்ன செய்வேன் நாராயணா

தேனென த்தித்திக்குமுன் திருநாமம்  சொல்வதன்றி

       அனுபல்லவி


 வானும் புவியுமளந்த வாமனா ஶ்ரீதரா

 ஆனிறை மேய்த்த கண்ணனே கேசவா

            சரணம்

மீனுமாமையுமாயவதாரமெடுத்தவனே

வானுறை அமரரும் அமரேந்திரனும்

கானுறை முனிவரும் தினம் பணிந்தேத்தும்

தீனசரண்யனே திருப்பாற்கடலோனே

நாராயணா உந்தன்…..

 

                           நாராயணா உந்தன்…..


                                  பல்லவி

                 நாராயணா உந்தன் நாமமே தினம் துதித்தேன்

                 பாரா முகமேனோ  மாதவனே கேசவனே

                                அனுபல்லவி

                 ஶ்ரீராமச்சந்திரனாயவதரித்தவன் நீயே

                 ஓராயிரம் பெயருடைய பரம்பொருளும் நீயே

                                    சரணம்

                 கார்குழலாள் கோமளவல்லியின் கரம் பிடித்த

                 ஆராவமுதன் சாரங்கபாணியும் நீயே தானன்றோ

                 மாரனையும் பிரமனையும் படைத்தவனே பரந்தாமா

                 பாரோர் பணிந்தேத்தும் பரமபத நாதனே


                 ஊர் போற்றும் உத்தமனே உலகுண்டவாயனே

                 பார்த்தன் தேர் நடத்திய பார்த்தசாரதியே

                 கீர்த்திமிகு திருமகளை மார்பில் வைத்திருப்பவனே                                   

                 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனே     

   

                 சீர்மல்கும் திருமலைமேல் நிற்கும் ஶ்ரீநிவாசனே

                 ஆர்த்தெழுந்த இரணியனை வதைத்த நரசிம்மனே

                 கார்வண்ணக் கண்ணனே கமலநாபனே

                 போர் நடத்தி ராவணனைக் கொன்ற ரகுராமனே                    

                 


Tuesday, 26 September 2023

மந்திகள் பாயும்…..


நாலாயிர திவ்ய பிரபந்தம் 

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே".

விளக்கம் :  

குரங்குகளானவை ஒரு கிளையில் நின் றும் மற்றொரு கிளையில் பாயப்பெற்ற வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே நித்யசூரிகள் பூக்களைக் கொண்டு வந்து ஆராதிக்கும்படி நிற்பவ னாய் கோயிலிலே திருவனத்தாழ்வானா கிற போக்யமான படுக்கையையுடைய னான அழகிய மணவாளனுடைய செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீ தாம்பரமும் அப்பீதாம்பரத்தின் மேலே பிரமனைப்படைத்த ஒப்பற்ற அழகையு டைய திருநாபிக்கமலமும் ஆகிய இவற் றின் மேற்படிந்ததன்றோ என்னுடைய மனதிலே விளங்குகின்ற இனிதான ஆத்மஸ்வரூபம். ஓம் நமோ நாராயணாய....


                                         மந்திகள் பாயும்…..


                                                   பல்லவி

                          மந்திகள் பாயும் வடவேங்கட மாமலை மேல்

                          வந்தனையேற்று  நிற்கும் மலையப்பனைத்துதித்தேன்

                                                 அனுபல்லி

                          அந்தி போல் நிறத்தாடையணிந்தரவணை மேல் துயிலும்

                          உந்தி கமலனை அரங்கத்தம்மானை

                                                   சரணம்

                          இந்திராதி தேவர்களும் சுகசனகாதியரும்

                          சந்திர சூரியரும் பிரமனுமனங்கனும்

                          வந்தனை புரிந்திடும் கேவனை மாதவனை

                          சிந்தையில் வைத்து சீரடி போற்றி

   

                          

                          

                                                 

Sunday, 24 September 2023

“ கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்”

 

         “  கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்”

  இங்கு நான் வந்திறங்கியது ஏப்பிரல் மாதம்.  குளிர் முடிந்து வெய்யில் காலத்தை நோக்கி நகரத்துவங்கும் நேம். சீதோஷ்ணம் பற்றிச் சொல்லும்படியாக ஏதும் முக்கியமாக இருக்கவில்லை. இதோ இப்ப செப்டம்பர் மாத்த்தின் கடைசி வாரம் வந்தாச்சு. ம், தாமரை எழுதிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருது.  நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, நீருக்குள் மூழ்கிடும் தாமரை, சட்டென்று மாறுது வானிலை…. ஆம் மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கின்றன. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் சட்டென்று  சில வாரம் கழித்து வண்ண வண்ண இலைகளெல்லாம் உதிர்ந்து விடுமாம்! நம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதமவை திறக்கும்போது  பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம். அமெரிக்காவின் அழகான இலையுதிர் காலத்தில் இங்குள்ள மரங்களில் இலைகள் எல்லாம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன் என்று ஒவ்வொரு வண்ணத்திலும் மாறி பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கும். எது எப்படியோ இந்த இலைகளின் அழகை பார்த்துக்கொண்டு ஒரு நதிக்கரையில் நடப்பதோ வண்டியை எடுத்துட்டு இரண்டு பக்க மரங்களின் அழகை பார்த்துட்டு அப்படியே நீண்ட தூர பயணம் போவதோ ஆனந்தம்.ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது. விஸ்கான்சில் செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்!) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேளை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். விஸ்கான்சில்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும்.  குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே. குளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர்.  குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று  போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். இலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.




Saturday, 23 September 2023

கீர்த்தி மிகு…..



           கீர்த்தி மிகு…..


                  பல்லவி

    கீர்த்தி மிகு அருணாசலேஸ்வரனை

    சீர் மல்கும் திருவண்ணாமலைதனில் துதித்தேன்

                அனுபல்லவி

    மூர்த்தி தலம் தீர்த்தமென்னுமனைத்திலும் சிறந்த

    பூர்த்தியாய் புகழ் பெற்ற திருத்தலத்தில் கோவில் கொண்ட

                     சரணம்

     கார்த்திகை தீபமாய் விளங்கும் தேவனை

     பார்த்தனுக்கு கீதை சொன்ன கேசவன் நேசனை  

     ஆர்த்தெழுந்த திரிபுரனை வதம் செய்த ஈசனை

      ஊர் போற்றும் உண்ணாமுலை கரம் பிடித்த சிவனை ….( கீர்த்திமிகு…)


     கார்த்திகேயன் கம்பத்தில் காட்சி தந்தருளிய

     நேர்த்தி மிகு அருணகிரி  முக்தி பெற்ற திருத்தலம்

     நாற்திசையும் புகழ் விளங்கும் நமச்சிவாயனை

     பார் புகழும் தேவாதி தேவனைப் பரமனை….( கீர்த்தி மிகு….)

      

            

      

   


       

     


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். 

எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். 

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. 

பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். 

கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். 

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். 

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. 

ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. 

கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. 

இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 

142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. 

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். 

பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. 

காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். 

அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.

 இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். 

ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.

 திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். 

அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்,

கிளி கோபுரம் (81 அடி உயரம்); 

தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), 

தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); 

மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),

 மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); 

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),

 வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். 

இதை காந்த மலை என்பர். 

காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). 

கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். 

இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 

360 தீர்த்தங் களும், 

பல சந்நிதிகளும், 

அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 

26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

 அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். 

மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. 

அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. 

இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். 

ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. 

இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். 

அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். 

அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். 

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது.




Thursday, 21 September 2023

அத்திமர கணபதியை…..

 


                                அத்திமர கணபதியை…..


                                        பல்லவி

                   அத்திமர கணபதியை சுத்தி வந்து துதித்தேன்

                   நித்தியம் பணியும் எனக்கருள வேண்டுமென

                                     அனுபல்லவி

                  நித்திலத்  தொத்தெனும் கேசவன் மருகனை

                  புத்தியிலுறைபவனை சக்தியின் மகனை

                                         சரணம்

                  தித்திக்கும் மோதகப்பிரியனைக் கரிமுகனை

                  வித்தகர் போற்றும் விக்ன விநாயகனை

                  எத்திசையும் புகழ் விளங்கும்  மத்தள வயிரனை 

                  வெத்திலை பாக்கு பழம் புஷ்பங்கள் படைத்து

என்னை விட்டகலாதே…..

 

                                    என்னை விட்டகலாதே…..


                                          பல்லவி

                              என்னை விட்டகலாதே ஶ்ரீ ரகுராமா

                              உன்னையே நம்பி நீயே கதியென துதிக்கும்

                              (ராமய்ய ராமா பட்டாபி ராமா கோதண்ட ராம

                                                                        

                                        அனுபல்லவி

                             அன்னை தந்தை குரு வனைத்தும் நீயே

                             சென்ன கேசவனே பன்னக சயனனே

                                              சரணம்

                            தென்னிலங்கை சென்று ராவணனை வதைத்தவனே

                            முன்னமகலிகையின் சாபம் தீர்த்தவனே

                            சொன்னசொல் தவறாத உத்தமன் நீயன்றோ

                            புன்னகை முகத்தோனே புவியாளும் மன்னவனே

                            


    


Wednesday, 20 September 2023

சிவ சிவ சிவ என…..

 



                                        சிவ சிவ சிவ என…..

     

                                             பல்லவி

                            சிவ சிவ சிவ என சொல்லென் நாவே

                            பவ பயம் போக்கிடும் தவநெறி சேர்த்திடும்

                                           அனுபல்லவி

                            புவனம் போற்றும் கேசவன் நேசன்

                            ஈசன்  நமச்சிவாயனின் திருநாமம் 

                                               சரணம்

                            கவலை பிணியிடர் களைந்திடச்செய்யும்        

                            உவகை ஆனந்தமனைத்துமளித்திடும்

                            பவவினைப் பயன் நீக்கும் நவநிதி் சேர்க்கும்

                            அவனியோரனைவரும் கொண்டாடும் நாமம்

                            

                                                                     

                         

அன்பே கடவுளென்று…..



                     அன்பே கடவுளென்று…..


                                பல்லவி

            அன்பே கடவுளென்றறிந்தபின் மனமே

            துன்பம் நமக்கில்லை  இவ்வுலகிலென்றும்

                             அனுபல்லவி

            முன்பே ஞானியர்கள் முனிவர்கள் சொன்னது

            இன்பம் தருமிதுவன்றி வேறில்லை கேசவனே

                                  சரணம்        

            உம்பரும் தும்புரு நாரதரும் துதிக்கும்

            எம்பிரானவனே அனைத்துக்குமாதாரம்

            நம்பித் துதிப்போம் நாம் நாராயணனை

            வெம்பவக்கடல் கடக்க அவனே நம் துணை


           இம்மையலும் மறுமையிலும் அவனே நம் கதியென     

           சிம்ம முகத்தோன் ஶ்ரீ நரசிம்மன்

           அம்புய நாபனவன் நாமமே தினம் துதிப்போம்

           செம்பொற் பாதந்தனில் மலர் தூவி வழிபடுவோம்

            

                                    


         

          

      


   

 *"மனம் கலங்காதிருக்க..."*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு

அடிமையாக்கிய போதும்

*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே

கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்

வீழ்ந்த போதிலும்

*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான

சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த

அசமயத்திலும் *குசேலர்*

மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து

ஊர்ந்த போதிலும்

*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக 

இருந்தபோதிலும்

*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்

கஷ்டப்படுத்திய போதும்

*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்

வெட்டிய நிலையிலும்

*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்

பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்

*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்

வேலை செய்த போதும்

*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை

பறிகொடுத்த போதும்

*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே

படாதபாடு படுத்தியபோதும்

*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்

விஷ தீர்த்தம் தந்த போதும்

*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை... 

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்

*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏🏻

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி? 

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*

(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும் 

சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*

(சுய அறிவு)

மன அமைதியுடன், 

நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம். 

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்... வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்... என்ன நடத்தாலும், எதை இழந்தாலும்,

*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...எதையும் தாங்கும் சக்தி... ஆதலால் ...

*விடாது நாம ஜபம் செய்வோம்...*

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...

மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

அலகிலா விளையாடல்……

 

                 அலகிலா விளையாடல்……


                           பல்லவி         

        அலகிலா விளையாடல் பல புரியும் கேசவனே

        சுலபமாய்க் குறை நீக்கி ஏற்றருள்வாயே

                         அனுபல்லவி

        உலகுண்ட வாயனே உனையன்றி வேறுதுணை

        உலகில் எனக்கில்லை என்றறிந்த மாயோனே     

                             சரணம்                    

         புலன்களைந்தும் வெவ்வேறு வழிசெல்ல

         மலந்தள்ளுமுடலோ அதன் பின்னே செல்ல

         பலமிலா நாவோ  பொய்யொன்று பேச

         நலம் கருதி நான் செய்யும் வழிபாட்டை     

                  

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு

வினை வேறு பட்டவர்பால் மேவும் — அனமே

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே

கனமொன்று மேலவர் தங் கண்

அனமே= அன்னம் போன்ற நடையுடைய அழகியே! கேள்!

வினை வேறுபட்டவர்பால்= நல்ல செய்கை இல்லாத கீழோரிடத்தில்

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் = மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும்

கனம் ஒன்று மேலவர் தங்கண் = பெருமை மிக்க பெரியோரிடத்தில்

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே = மனமும், சொல்லும், செயலும் ஒன்றேயாம்.

தமிழில் இதற்கு அழகான மூன்று சொற்கள் உண்டு:

வாய்மை = வாயினால் தீமை செய்யாதிருத்தல்

உண்மை = உள்ளதாற் பொய்யாதொழுகுதல்

மெய்மை = உடலினால் தீங்கு செய்யாதிருத்தல்.


Tuesday, 19 September 2023

பரம்பொருளே…..

 


உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே


                              பரம்பொருளே…..


                                       பல்லவி

                  பரம்பொருளே ஶ்ரீராமா உனையறிவதெங்கனம்

                  அரனரியயன்  நீயே  அனைத்தும் நீயேயென

                                    அனுபல்லவி

                   கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனைப் பணிந்தேன் கேசவனே

                   நரனாயவதரித்து லீலைகள் பல செய்தவனே

                                       சரணம்

                   சரணடைந்த அடியாரனைவருக்குமிங்கு

                   வரமென மதிநலம் அருளும் பொருளெதுவோ

                   பரமென அமரர்கள் தொழும் பொருளெதுவோ

                   அறிந்தேனதுவே உன் சுடரடியென்றே                                 

                   

                                   

                       

                   

                   


     

சிறப்புக்கள் நிறைந்த……

 

                           சிறப்புக்கள் நிறைந்த……


                                     பல்லவி

                  சிறப்புக்கள் நிறைந்த ஆஞ்சநேயனை

                  சிறிய திருவடியை மனமாரத்துதித்தேன்

                                  அனுபல்லவி

                  மறதி பவபயம் நீங்கிட வேண்டியும்

                  பிறப்பிறப்பில்லாத பெருநிலை பெறவும்

                                     சரணம்        

                 குறையொன்றுமில்லாத கோவிந்தன் கேசவன்

                 சிறப்புடன் ராமனாயவதரித்த போதவர்

                 தூதனாய் விளங்கிய வாயுகுமாரனை

                 அறம் பொருளின்பமனைத்தும் பெறவே                   

                  

                       

Monday, 18 September 2023

புள்ளிமயிலேறி…….

 


                                       புள்ளிமயிலேறி…….


                                            பல்லவி

                             புள்ளிமயிலேறி  உலகை வலம் வந்த

                            வள்ளி மணாளனை முருகனைத் துதித்தேன்

                                          அனுபல்லவி

                             கள்ளழகன் கேசவன் விரும்பும் மருகனை

                             உள்ளம் கொள்ளை கொள்ளும் பேரழகுக்குகனை

                                             சரணம்

                            பிள்ளைப்பிராயத்தில் பெரிய பெயர் பெற்றவனை

                            அள்ளக்குறையாத கருணை மழை பொழிபவனை

                            துள்ளி வரும் வேல் பிடித்த வேலாயுதனை

                            புள்ளிருக்கு வேளூர் வளர் முத்துக்குமரனை

கேசவனுனைப் போற்றி…..

          


               கேசவனுனைப் போற்றி…..


                                பல்லவி

           கேசவனுனைப்போற்றி  தினமொருபாடல்

           ஆசையுடன் நான் பாட அருள்புரிவாயே

                             அனுபல்லவி

           காசினியோர் போற்றும் கலியுக க்கடவுளே

           பூசுரர் தொழுதேத்தும் வேதப் பொருளே     

                                சரணம்

           பாசுரம் பல பாடி ஆழ்வார்கள் போற்றிய

           மாசு மருவில்லாத பேசும் தெய்வம் நீயே

           தேசுடைய சோதியே ஈசன் நேசனே

           வாச மலர் தூவி திருவடி பணிந்து

Sunday, 17 September 2023

தாமதியாமலெனக்கருள்வாயே…..

 

                                      


                                     தாமதியாமலெனக்கருள்வாயே…..


                                                 பல்லவி

                                    தாமதியாலெனக்கருள்வாயே

                                    கோமதித்தாயே உனையே துதித்தேன்

                                              அனுபல்லவி

                                    ஆமருவியப்பன் கேசவன் சோதரி

                                    மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி

                                                  சரணம்       

                                    காமக்ரோதாதி அறுபகையகல உன்

                                    நாமமே துணையெனப் போற்றி வணங்கினேன்

                                    பூமண்டலம் போற்றும் புவனேச்வரியே

                                    தேமதுரத் தமிழால் பாமாலை சூட்டினேன்


                                     பூமலர் மாலையும் தங்கப்பாவாடையும்

                                     சேமமுடனணிந்து காட்சி தருபவளே

                                     காமேச்வரியே ஆடித்தவமிருப்பவளே

                                     ஓமெனும் மந்திரப்பொருளானவளே

      

                                     சோமசுந்தரர் சிவபெருமானும்

                                     வாமனமூர்த்தி நாராயணனும்

                                     பூமியில் சங்கர நாராயணனாக

                                     எழுந்தருளச் செய்த சங்கரி நீயே

                                          

                                     

                                                


                                    

Friday, 15 September 2023

கரிவரதராஜனை…..

 


               

                           கரிவரதராஜனை…..


                                  பல்லவி

               கரிவரத ராஜனை மனமாரத்துதித்தேன் 

               கரிக்கபயம் தந்த திருமாலைக் கேசவனை

                                அனுபல்லவி

                பரிவுடன் ஆயர்குல மாந்தரைக் காத்திட

                கிரி கோவர்த்தனமேந்திய கண்ணனை

                                    சரணம்

                விரி கமல மலரேந்தும் திருமகளைத் தன் மார்பில்

                தரித்திருப்பவனை தரணிதரனை

                பரியேரும் பெருமாளை பார் போற்றும் முகுந்தனை

                புரிசங்கமேந்தும்  ஹரிநாராயணனை          

    

நாள் தோறும்…..



                                   நாள் தோறும்…..


                                     பல்லவி

                   நாள் தோறும் நாராயணனைத் துதித்தேன்

                  ஆள்வதவனே என்றறிந்து அவன் பதம் பணிந்து

                                   அனுபல்லவி

                   வாள் சங்கு சக்கரம் கதை சார்ங்கமென்னும்

                   பஞ்சாயுதமேந்தி நிற்கும் கேசவனை நினைந்து

                                       சரணம்

                   தோள் வலி மிகுந்த கோவிந்தனை மாதவனை

                   கோள்களும்  எண்திசை பாலரும் பிரமனும்

                   தாள் பணிந்தேத்தும் தாமரையாள் கேள்வனை

                   மாள்வதும் பிறப்பதுமில்லாத தேவனை


Thursday, 14 September 2023

என்னன்புத் தோழன்…..

 

                     என்னன்புத் தோழன்…..


                             பல்லவி

          என்னன்புத் தோழன் மாலன் புகழ் பாடினேன்

          பன்முகத் தன்மை கொண்ட கேசவனை மாதவனை

                           அனுபல்லவி

          அன்புடன்  என்னோடு ஆடிக்களித்தவனை

          நன்மைகள் பல செய்த நாராயணனை          

                              சரணம்

         வன்மமில்லா மனத்தோனை வான் புகழ் கொண்டவனை

         மென்மையுடனெனக்கருளும் தேவாதி தேவனை        

         தன்னுள் பல மேன்மைகளை வைத்திருக்குமீசனை                          

         இன்னுமென் மனத்தில் நீங்காதிருப்பவனை

மலரலங்காரம்…..

 


                            மலரலங்காரம்…..

                                  பல்லவி

                 மலரலங்காரம் புனைந்த மகாதேவனை

                 நலம் தரும் சிவனை நாளும் வணங்கினேன்

                                அனுபல்லவி

                 உலகுண்ட வாயன் கேசவன் நேசனை

                 அலகிலா விளையாடல் பல புரிந்த ஈசனை

                                 சரணம்

                 சுலபமாய் மனம் குளிர்ந்தருளும் தேவனை

                 பலவிதமான திருமுழுக்கேற்பவனை

                 உலகநாயகனை ஆலவாயழகனை

                 நிலவணிந்த பெருமானை நீலகண்டனை                                         

                 

Wednesday, 13 September 2023

புதுப்பாடல் உனைப்போற்றி…..

 


                                     புதுப்பாடல் உனைப்போற்றி…..


                                               பல்லவி

                        புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட வரமருள்வாய்

                        மதுரகாளியே  கேசவன் சோதரியே

                                             அனுபல்லவி

                        எதுகை மோனையுடன்  இலக்கணமும் சேர்ந்து

                        மதுரத்தமிழில் சொற் பொருள் நயத்தோடு

                                               சரணம்

                        விதம் விதமான அலங்காரம் புனைபவளே

                        திங்கள் வெள்ளியில் மட்டும் காட்சி தருபவளே

                        மதுர மொழியாளே மாவிளக்கேற்பவளே

                        சிறுவாச்சூர் தலத்துறையும் மாகாளி பைரவியே        

கானம் தனில்…..

 


                                         கானம் தனில்…..


                                                பல்லவி

                            கானம் தனில் மகிழும் சிவனுனைத் துதித்தேன் —  சாம

                                              அனுபல்லவி

                            மோனத்தவம் செய்யும் முனிவரும் ஞானியரும்

                            வானுறை தேவருமிந்திரனும் வணங்கிடும்

                                                 சரணம்

                            ஆனிறைகள் மேய்த்த கேசவன் நேசனை

                            மான் மழுவேந்திய தேனுபுரீச்வரனை

                            ஊனம் களைந்தென் மன இருள் நீங்கவும்

                            ஞானம் பெறவும் பவபயமகலவும்

                                                துரிதம்

                           பானுவும் நிலவும் நந்தியும் கணங்களும்

                           தேனுவும் மறைகளும் கரம் பணிந்தேத்தும்

கதி நீயே தாயே…..



                                                 கதி நீயே தாயே…..


                                                    பல்லவி

                              கதி நீயே தாயே கழலிணை தொழுதேன்

                              மதி சேகரன் மனையே மாதங்கியே உமையே

                                                  அனுபல்லவி

                               விதியையும் காத்தருளும் கேசவன் சோதரியே

                               கதிரொளியின் காந்தியைப் பழிக்கும் தேசுடையவளே                              

                                                     சரணம்

                              புகழ் பதவி ஆஸ்திகளெதுவும் தேவையில்லை

                              இகழ்வில்லா வாழ்வும் இருக்க ஓரிடமும்

                              சகந்தனிலாரோக்கியமும்  தந்தாலே போதும்

                              மகிழ்வுடனுனைப் போற்றி வாழ்ந்திடுவேனன்னையே

                              

 

Tuesday, 12 September 2023

இதுதானோ…..

 




                                              இதுதானோ…..


                                               பல்லவி

                                  இது தானோ திருவேங்கடம்  

                                  புதுவிதமான அனுபவம் தரும்

                                            அனுபல்லவி

                                 இதிகாச புராணங்கள்  போற்றும் 

                                 மதுசூதனன் கேசவன் நின்றருளும்                             

                                              சரணம்          

                                  பதுமாவதியும் அலமேலுமங்கையும்

                                  அருகிருந்து போற்றும் திருவேங்கடநாதனெனும்                  

                                  பெருமைக்குரிய கோவிந்தன் காட்சிதரும்

                                  திருமலையென்னும் அழகிய திருத்தலம்

பாதகமலம்…..

 

                                         

                                             பாதகமலம்…..


                                             பல்லவி

                           பாதகமலம் பணிந்தேனய்யா கேசவா - உனது

                           பாதகமலம் பணிந்தேய்யா…..

                                          அனுபல்லவி

                            பாதக மலமகல வேண்டுமென வேண்டி - எனது

                            பாதக மலமகல வேண்டுமென வேண்டி

                                              சரணம்

                            மாதவனே மதுசூதனனே பரந்தாமா

                            நீதான் கதியென உனையே சரணடைந்தேன்

                            ஓதக் கடல் நடுவே அரவணைமீதுறங்கும்

                            ஶ்ரீதரனே ஶ்ரீமன் நாராயணனே  

                 

                             சோதனை செய்யாமல் வேதனையளிக்காமல்

                            ஆதரவு தருவாயெனவே அடைக்கலமடைந்தேன் 

                            மாதரசி திருமகளை மார்பில் வைத்திருப்பவனே

                            பூதலம் புகழ்ந்தேத்தும் திருவேங்டமுடையானே


                           

விட அரவணைமீது…..

 

              

                                     விட அரவணைமீது…..


                                                    பல்லவி                                            

                               விட அரவணைமீது பள்ளிகொண்ட திருமால்

                               பாண்டு ரங்க விட்டலன் தானே அருள் புரிவான்

                                                 அனுபல்லவி

                               அடக்கமுடன் வேண்டி அவனருளை யாசிக்கும்

                               அடியவரனைவரையும் தயவுடனேயாட்கொண்டு

                                                        சரணம்

                               உடல் ஊனமுற்றாலென்ன நோய்வாய்ப் பட்டாலென்ன

                               கடல் நடுவே உறங்கு கேசவனை மாதவனை

                               திடமுடம் மனத்தில் தூய பக்தியுடன் 

                               இடை விடாது துதிக்கும் பக்தருக்கெல்லாம்

நான் பார்க்காவிட்டாலென்ன…..

 


                                நான் பார்க்காவிட்டாலென்ன…..


                                                    பல்லவி

                               நான் பார்க்காவிட்டாலென்ன கோவிந்தா

                               நீயெனைப் பார்த்தால் போதும் கோவிந்தா

                                                  அனுபல்லவி

                               ஊனுயிர் தந்ததெல்லாம் நீதானே கேசவனே

                               மீனுருவாய்ப் பிறந்து வேதங்களை மீட்டவனே

                                                   சரணம்

                               ஆனிறை மேய்த்தவனே ஆதிமூலமே

                               வானுறை தேவர்களும் சுகசனகாதியரும்

                               கானுறை முனிர்களும் அனைவரும் வணங்கிடும்

                               தீன சரண்யனே திருமாலே கோவிந்தா 

                              

Saturday, 9 September 2023

நம்பித் துதிப்பார்க்கு….

 


                                  நம்பித் துதிப்பார்க்கு….


                                          பல்லவி

                        நம்பித் துதிப்போர்க்கு அன்புடனே அருள் தரும்

                       அம்பிகையை முப்பிடாதியம்மனைத் துதித்தேன்

                                       அனுபல்லவி

                      இம்மைக்கும் மறுமைக்கும் துணையென விளங்கும்

                       அம்புய நாபன் கேசவன் சோதரி                  

                                          சரணம்

                       உம்பர் முனிவர் பணி  உமையவளவளே

                       செம்பொன் மேனியன் சிவபெருமான் நாயகி

                       வெம்பவக் கடல் கடக்க உதவிடுமழகு

                       செம்பஞ்சுக் குழம்பணிந்த பாதம் பணிந்து

முனைப்புடன் துதித்தேன்…..

 இன்றைய திவ்ய ஸேவை....

        திரு அல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரத்னாங்கி   ஸேவை...

கற்றிலேன் கலைகள்;

ஐம்புலன் கருதும் கருத்துளே 

திருத்தினேன் மனத்தை

பெற்றிலேன் அதனால்

பேதையேன் நன்மை; பெரு

நிலத்தாருயிர்க்கெல்லாம்

செற்றமே வேண்டித்

திரிதருவேன்; தவிர்ந்தேன்;

செல்கதிக்கு உய்யுமாறெண்ணி

நல்துணையாகப் பற்றினேன்

அடியேன் நாராயணா

என்னும் நாமம்..   __திருமங்கை ஆழ்வார்


கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.


                                                              முனைப்புடன் துதித்தேன்…..


                                                                       பல்லவி

                                                    முனைப்புடன் துதித்தேன் கேசவனே உன்னை

                                                    எனையாட்கொள்ள வேண்டுமென வேண்டி  

                                                                     அனுபல்லவி

                                                    வினைப்பயனால் கட்டுண்டு இவ்வுலகிலுழன்றேன்

                                                    உனை நினையாமலே வீணிலலைந்தேன்  

                                                                          சரணம்

                                                    உனைத்துதிக்கும் கலைகளேதும் கற்றவனில்லை

                                                    எனையாட்டுவிக்கும் புலன்வழியே சென்றேன்                                                 

                                                    தினையளவும் நற்செயல் புரியாமல் திரிந்தேன்

                                                    அனைத்தும் நாராயணனே என்றறிந்த பின்னே

சொன்தையே சொல்லி….

 


                                    சொன்தையே சொல்லி….


                                               பல்லவி

                      சொன்னதையே சொல்லி உனை சலிப்படைய வைக்கிறேன்

                      என்ன செய்ய கேசவனே நீ இருப்பதும் அப்படித்தானே

                                           அனுபல்லவி

                      பன்னகசயனனென்றும் பாற்கடல்வாசனென்றும்

                      உன்னைச் சொல்லாமல் வேறென்ன சொல்லுவது

                                              சரணம்

                      இன்னும் நீ படுப்பதோ பாம்பணை மீதுதான்

                      நன்றாகக்கிடப்பதுவோ பாலாழி நடுவில்தான்       

                      மின்னும் சக்கரமும் சங்கும் கதையும் 

                      கைவாளும் வில்லுமனைத்துமதுவேதான்


                      நன்றுனைப் பணிந்திருக்கும் சனகாதிமுனிவர்களும்

                      உன்னருகே வீற்றிருக்கும் திருமகளும் மாற்றமில்லை

                      என்றுமுனைப்பாடுமாழ்வாரும் நாரதரும்

                      இன்றுமவரேதான் எதுவும் புதிதல்ல 

      


Friday, 8 September 2023

நல்லதையும்…..

         


                                       நல்லதையும்…..        

                             

                                                   பல்லவி

                       நல்லதையும் கண்ணனையும் நினைத்து நடந்தால் போதும்

                       எல்லா நன்மையும் தானே தேடி வரும்

                                                அனுபல்லவி

                       சொல்லுக்கடங்காத அழகன் கேசவனுடனே

                       வல்லரக்கர் குலமழித்த ஶ்ரீவாசுதேவனையும்

                                                  சரணம்

                        அல்லலிடரனைத்தும் தானே தொலைந்திடும்

                        வல்வினை பவ பயம் தீயவை  விலகிடும் 

                        இல்லாமையென்பதே இல்லாமல் போய்விடும்

                        செல்வம் குலம் கல்வி நல்வாழ்வு பெருகும்

                        

                       

                       

கண்ணே கருமணியே…..

 


                                      கண்ணே கருமணியே…..


                                           பல்லவி

                     கண்ணே கருமணியே மாணிக்கமே எனப்போற்றி

                     வண்ணமுற அழைத்துன் திருவடி பணிந்தேன்

                                         அனுபல்லவி

                     கண்ணனெனும் பெயருடைய கேசவனே மாதவனே

                     எண்ணம் முழுதும் நிறைந்திருக்குமுனையே

                                          சரணம்

                      மண்ணையுண்ட வாயனே மதுசூதனனே

                      புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் தெரிபவனே

                      அண்ணன் கோவில் பெருமாளே அணிவிளக்கே

                      வண்ணமலர் தூவி வாஞ்சையுடன் துதித்தேன்

                      

சக்தியே உந்தன ….

     



                             சக்தியே உந்தன ….


                                   பல்லவி

                    சக்தியே  உந்தன் மலர்ப் பதம் பணிந்தேன்        

                    பித்தன் மனையாளே கேசவன் சோதரியே

                                அனுபல்லவி

                    முக்தி பெற உந்தன் தாள் பணிவதன்றி

                    உக்தி உபாயம் வேறறியேனதனால்

                                  சரணம்

                    சக்தி நீயே கதியென உன்னை

                    பக்தியுடன் துதிக்கும் பக்தருக்கெல்லாம்

                    நற்கதி நல்கிடும் அன்னையே பரமேச்வரி

                    உத்தமியே கௌரி உமாமகேச்வரி