சுப்ரமண்யனை.....
பல்லவி
சுப்ரமண்யனை ஸ்வாமிநாதனை முப்புரமெரிசெய்த
சங்கரன் மகனை மனமாரப்பணிந்தேன் — பால
அனுபல்லவி
இப்பிரபஞ்சமே இனிது போற்றிடும் கார்த்திகேயனை
கேசவன் மருகனை குகனை சண்முகனை — பால
சரணம்
தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
மூவரும் திங்களும் ஞாயிறும் திசைகளும்
யாவரும் வணங்கிடும் சேவற்கொடியோனை மயில்வாகனனை
பாவலர் போற்றும் பன்னிருகையனை வேலாயுதனை
தாளம்: சங்கீர்ண அடை
No comments:
Post a Comment