பெருமையுடன்
பல்லவி
பெருமையுடன் பழமுதிர்ச்சோலையெனும்
படைவீட்டில் வீற்றிருக்கும்
முருகபெருமானைப் பணிந்தேன்
அனுபல்லவி
குருவும் அவனே குழந்தையும் அவனே
அருள் தரும் கருணை
தெய்வமும் அவனேயென்று
சரணம்
வண்டாடும் சோலைகளும் புனித நூபுர கங்கையும்
கண்டார் வியக்கும் பேரழகும் கொண்ட
கண்கவர் திருத்தலத்தில் கொலுவிருக்கும்
சரவணனை குருபரனை சண்முகனை
கண்ணபெருமான் கேசவன் மருகனை
தாளம்: மிச்ர மட்யம்
No comments:
Post a Comment