மாதா மயூரவல்லி.....
பல்லவி
மாதா மயூரவல்லி மனங்கனிந்தருள் தா
நாதன் ஆதிகேசவன் மணிமார்பையலங்கரிக்கும்
அனுபல்லவி
நீதான் துணையென்றுன் பாதாரவிந்தங்களை
ஆதரவு வேண்டி அனுதினம் துதித்தேன்
சரணம்
யாதேனும் நற்கருமம் சிறிதும் செய்திலேன்
வேதாகம சாஸ்த்திர புராணங்கள் கற்றிலேன்
சேதரமின்றியென் வாழ்வு வளம் பெற
ஆதாரம் நீயெனவே அன்னையுனைச் சரணடைந்தேன்
No comments:
Post a Comment