பணிந்தேன்.....
பல்லவி
பணிந்தேன் பாலகோபாலனை
துணிந்தேன் அவனே கலியுகக்கடவுளென்று
அனுபல்லவி
மணிமார்பில் திருமகளும் நாபியில் பிரமனும்
அணிகளெனத் திகழ் பரந்தாமன் பெயர் பாடி
சரணம்
பிணியிடர் கவலை பயம் நீக்கிப்
பணிந்திடும் பக்தரை அன்புடன் காத்திடும்
அணிமணி கௌஸ்துப மாலைகளணிந்திடும்
புனிதன் கேசவன் நாமமே போற்றி
தாளம்: ரூபகம்
No comments:
Post a Comment