சண்முகநாதனை...
பல்லவி
சண்முகநாதனை மனமாரப் பணிந்தேன்
குன்றக்குடி நின்ற குமரனை முருகனை
துரிதம்
நாரதர் கண்ணனும் பானுவும் வசிட்டரும்
கௌசிகமுனியுடன் பஞ்சவர் போற்றும்
அனுபல்லவி
கண்கவர் அழகனை கேசவன் மருகனை
விண்ணவரும் போற்றும் சிங்கரவேலனை
சரணம்
வண்ணமயில் வாகனனை ஆறுமுகனை
வள்ளி தெய்வானை மணாளனை குகனை
புண்ணியமூர்த்தியை சுப்ரமண்யனை
பன்னிரு கையனை பார்வதி பாலனை
No comments:
Post a Comment