கண்ணனின்.......
பல்லவி
கண்ணனின் லீலைகளைக் கேட்டாலும் போதும்
புண்ணியம் கிடைத்திடும் செவிக்கின்பம் சேரும்
அனுபல்லவி
மண்ணையுண்டவாயன் மாதவன் கேசவன்
வெண்ணையை திருடியுண்ட நவநீதசோரன்
சரணம்
தண்டை கிண்கிணியணிந்து தவழும் ஶ்ரீக்ருஷ்ணன்
கொண்டையில் பீலியும் கையில் வேய்ங்குழலுமேந்தும்
புண்டரீகாக்ஷன் மதுராபுரி மன்னன்
தண்மதி முகத்தினன் தாமரைநாபன்
No comments:
Post a Comment