சரஸ்வதி.......
பல்லவி
சரஸ்வதி அன்னையே சரணடைந்தேன் உன்னையே
அரனும் கேசவனும் போற்றும் கலைவாணியே
அனுபல்லவி
நரர்சுரர் நான்முகன் நாரத முனிவரும்
மலைமகள் அலைமகள் அனைவரும் பணிந்தேத்தும்
சரணம்
கரங்களில் வீணையும் புத்தகமும்
கமலமலரும் மணிமாலையும் ஏந்தும்
பரதேவி கலைகளின் இருப்பிடமே
மறைகளும் புகழும் கலைமகளே மரகதமே
No comments:
Post a Comment