தணிகாசலனின்...
பல்லவி
தணிகாசலனின் தாமரைப்பதம்தனைச் சரணடைந்தேன்
பணிந்திடுமடியவர் மகிழ்ந்திடச் செய்திடும் அருள்மிகு
அனுபல்லவி
பிணியிடர் கவலை பழவினப் பயன் நீக்கி
துணிவும் கருணையும் ஞானமுமளித்திடும் சரவணன்
சரணம்
இந்திரன் கணபதி சனகாதியரும் சந்திரன் சூரியன்
நான்மறை நான்முகன் தேவரும் முனிவரும் அனைவரும் துதித்துடும்
கந்தன் கருணாரவிந்தன் கேசவன் மருகன் ஆறுமுகன்
சந்தக் கவி அருணகிரிநாதர் பாடிப் பரவிடும்
தாளம்: சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment