🌷 அப்பா 🌷
நிழல் தரும் விருட்சம் நீ
விழலாய்த் தரிசாய்க் கிடந்த என்னை
உழவு செய்து விளைமண்ணாக்கிய
உழவன் நீ
மழையாய் அன்பைப் பொழிந்து
பிழைகள் பல பொறுத்து
கழலடியில் வாழவைத்த காவலன் நீ
பழகு தமிழில் பாடங்கள் சொல்லி
அழகுறக் கலைகள் பயிற்றுவித்த ஆசான் நீ
அழலேந்துமீசனை அடையாளம் காட்டிய
முழு முதல் குருவும் நீ
குழலோனும் நீ
கழல் பணிந்தேன்
மழலை நான்
ஆண்டருள்வாய் அப்பா🙏🙏🙏
No comments:
Post a Comment