தேரேரி......
பல்லவி
தேரேரி பவனி வரும் கற்பகத்தைத் துதித்தேன்
பார் போற்ற வீற்றிருக்கும் கபாலியின் துணைவியை (தங்க)
துரிதம்
நந்தி கணங்கள் நாரதர் நரர்சுரர்
இந்திரன் சந்திரன் சூரியனுடனே
கந்தன் கணபதி எண்திசைபாலரும்
வந்தனை புரிந்து பின் தொடந்திட
அனுபல்லவி
கார்வண்ணன் கேசவன் அன்பு சகோதரியை
சீர்மல்கும் திருமயிலைத் தலத்திலுறைபவளை (தங்க)
சரணம்
நாற்கவிகள்புகழ் பாட நாதஸ்வரம் முழங்க
ஊர்வசி ரம்பையென மாதரார் நடனமிட
பேரும் புகழும் நிறை பாகவதர் பாட்டிசைக்க
ஊர் கூடி மகிழ்வுடனே கரம் பணிந்து உடன்செல்ல
No comments:
Post a Comment