சொன்னாலும்.......
பல்லவி
சொன்னாலும் நாவினிக்கும் கேட்டாலும் செவி குளிரும்
கண்ணன் திருநாமம் உளமார நினைந்து
அனுபல்லவி
புன்னகை தவழும் சென்ன கேசவன்
தன்னடி தொழுது மெய்யுருகியவன் நாமம்
சரணம்
இன்னல்கள் தீரும் இனியவைகள் நேரும்
முன்வினைப் பயன் நீங்கும் மூவாசைப் பிணி போகும்
கன்னலவன் நாமம் களிப்புறச் செய்யும் நாமம்
உன்னிக்கண்ணனாய்க் காட்சி தருமவன் நாமம்
No comments:
Post a Comment