ஜானகி மணாளனே....
பல்லவி
ஜானகி மணாளனே ஓ ரகுராமா
தீன சரண்யனே உனையே துதித்தேன்
அனுபல்லவி
கானகம் சென்று கௌசிக முனிக்குதவ
தானவரை அழித்த மாதவனே கேசவனே
சரணம்
ஆனிறை மேய்த்தவனே அபலை திரௌபதியின்
மானம் காத்தவனே அகலிகையின் சாபம்
அடி வைத்துத் தீர்த்தவனே அயோத்தியர் கோமானே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கிட
No comments:
Post a Comment