வாசுபுரத்தப்பனை.......
பல்லவி
வாசுபுரத்தப்பனை வாடனம் குறிச்சியில் கண்ணாரக் கண்டேன்
ஆசையுடனவன் திருவடி பணிந்து நேசமுடன் துதித்தேன்
அனுபல்லவி
வாசமலர்கள் கோர்த்த மாலைகள் சூடிய கேசவன்
தேசுடை மூர்த்தி மாசற்ற சோதியன் பேசும் தெய்வம்
சரணம்
பற்பலரும் போற்றும் அற்புத எழில். கொஞ்சும் திருமேனி
கற்கண்டோ தேனோ கனிரசமோ என்றினிக்கும் திருநாமம்
நற்பலன்கள் பலவும் பணிந்தோர்க்கருளும் திருவுள்ளம்
நற்றவ முனிவரும் தேவரும் துதித்திடும் மலர்ப் பதத்தினன்
தாளம்:சங்கீர்ண ஜம்பை
No comments:
Post a Comment