அருள் தருவாய்.......
பல்லவி
அருள் தருவாய் ஶ்ரீ சாமுண்டீஸ்வரி
மன இருள் அகன்றிட தினமுனைப்பணிந்தேன்
அனுபல்லவி
இருவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கவும்
தருமநெறிதனில் இனிது வாழவும்
சரணம்
ஊசி வழி செல்லும் நூலென மனமும்
ஆசையில் புலன்களின் போக்கினில் போகும்
மாசிலா அன்னையே கேசவன் சோதரி
நேசக்கரம் நீட்டி தடுத்தரவணைத்து
தாளம்:ஏகதாளம்
No comments:
Post a Comment