அன்புடையார்.......
பல்லவி
அன்புடையார் நெஞ்சங்களில் இன்புற வீற்றிருப்பான்
துன்பம் துயர் துடைக்கும் அருளாளன் கேசவன்
அனுபல்லவி
பன்னகசயனன் பரமதயாளன்
தன்னடி பணிவோர்க்கு இன்னருள் புரிவான்
சரணம்
அன்பில் திருவெஃகா திருவெவ்வுள் மற்றும்
திருக்குடந்தை திருப்பேரணியரங்கம் தன்னில்
நாகத்தணை கிடந்து நலமுற காட்சி தரும்
பாற்கடல் வாசன் ஶ்ரீமன் நாராயணன்
No comments:
Post a Comment