தயைபுரிவாய்....
பல்லவி
தயை புரிவாய் ஶ்ரீ சாமுண்டீச்வரி
பக்தியுடன் உன் பதமலர் பணிந்தேன்
அனுபல்லவி
அயனரி அரனும் தேவரும் முனிவரும்
நயமுடன் போற்றும் கேசவன் சோதரி
சரணம்
இயலிசை நாடகம் படைத்திடும் திறமையும்
பயன் தரும் கலைகளும் கல்வியும் செல்வமும்
வியத்தகு வெற்றியும் துயரிலா மேன்மையும்
உயரிய வாழ்வும் அடைந்திடும் வண்ணம்
No comments:
Post a Comment