இடைமருதூர்........
பல்லவி
இடைமருதூர் விடைபாகா
உன் பாதம் சரணடைந்தேன்
அனுபல்லவி
சடையா தோடுடைய செவியா
மதிபனல் சூடிய மாதொருபாகா
சரணம்
தீயவனாய்த் திரிந்து தீச்செயல்கள் புரிந்தேன்
காயம் சதமென்று நாளும் களித்திருந்தேன்
மாயப்பிறப்பறுக்கும் மருந்தே உனதருளால்
மனம் திருந்தித் துதித்தேன் கேசவன் நேசனே
தாளம்: சங்கீர்ண ஜம்பை
No comments:
Post a Comment