இடைமருதூர் அன்னையே........
பல்லவி
இடைமருதூர் அன்னையே உன்னையே சரணடைந்தேன்
கடைக்கண்ணருள் தந்து ஆட்கொள்ள வேண்டுமென
அனுபல்லவி
சடையன் விடைபாகன் மகாலிங்கம் மனம் விரும்பும்
கொடியிடையே பேரழகே பெருநலமுலையாளே
சரணம்
நான்முகனும் நான்மறையும் சண்முகனும் கணபதியும்
வானவர்கோனிந்திரனும் சனகாதி முனிவர்களும்
வான்மதியும் கதிரவனும் எண்திசைபாலரும்
நாமகளும் பூமகளும் கேசவனும் போற்றும்
தாளம்:சங்கீர்ணஜம்பை
No comments:
Post a Comment