பதம் பணிந்தேன்...
பல்லவி
பதம் பணிந்தேன் ஶ்ரீ சென்ன கேசவா
இதமுடன் எனையே ஆண்டருள வேண்டுமென
அனுபல்லவி
நிதமுந்தன் நாமமே ஓதித் துதித்தேன்
சதமுனது திருவடி நிழலென நினைந்து
சரணம்
பதவி பணம் புகழ் எதுவும் வேண்டேன்
விதம் விதமான உறவுகளும் வேண்டேன்
கதறியழைத்த கரிக்கும் காரிகைக்கும்
உதவிய பரம்பொருளே பாற்கடல்வாசா
No comments:
Post a Comment