பாலகிருஷ்ணன் லீலையை...
பல்லவி
பாலகிருஷ்ணனின் லீலையைக் காண
கண்ணாயிரம் வேண்டாவோ - (கோ) ( ஶ்ரீ)
அனுபல்லவி
ஞாலமுண்ட வாயன் ஆலிலைபாலன்
நீலநிறத்தழகன் மாலன் கேசவன் (கோ) (ஶ்ரீ)
சரணம்
நீலமயில் பீலி கொண்டையில் சூடி
காலில் சிலம்பணிந்து கைவளைபூட்டி
பூலோகம் கேட்டு மகிழும் வண்ணம்
கோலமுடன் நின்று குழலூதும் (கோ) (ஶ்ரீ)
கோவர்த்தன மலையைக் குடையெனப் பிடித்து
ஆவினங்களை அரவணைத்துக் காத்து
தேவரின் நலம் காக்கத் துணையாய் நின்று
மாவலியின் கர்வம்தனை மூவடியால் வென்ற (கோ) (ஶ்ரீ)
பால்தயிர் வெண்ணையைத் திருடியுண்டு
கால் கைகள் மேனி உரலில் கட்டுண்டு
சேல்விழி கோபியர்கள் மனங்களை கவர்ந்து
காளிங்கன் தலைமீது களிநடம் புரிந்த (கோ) (ஶ்ரீ)
No comments:
Post a Comment