தஞ்சமடைந்தேன்.........
பல்லவி
தஞ்சமடைந்தேன் தாயே மன
சஞ்சலம் களந்திடுவாயே
அனுபல்லவி
அஞ்சிடச்செய்யும் பவபயம் போக்கி
நெஞ்சினில் நிறைவும் அமைதியும் பெறவே
சரணம்
வெஞ்சமரில் அரக்கர் குலமழித்து
அஞ்சலென்றபய கரம் நீட்டும்
பஞ்சபாணப் பயிரவியே
கேசவன் சோதரி சாமுண்டீஸ்வரி
தாளம்:திச்ர ஜம்பை
No comments:
Post a Comment