நினைத்தாலும் போதும்.....
பல்லவி
நினைத்தாலும் போதும் மனத்திலவள் நாமம்
அனைத்து நலன்களும் தருவாள் ஶ்ரீ சாமுண்டீஸ்வரி
அனுபல்லவி
வனப்புமிகு ஈசன் சதுரங்கவல்லபநாதன்
மனையாள் ஶ்ரீராஜராஜேச்வரியின் தோழியை
சரணம்
தனக்குவமையில்லா கேசவன் சோதரி
எனக்கருளவென்று பூவனூர் எழுந்தருளி
வினைப்பயன்கள் போக்கி தனிக்கருணை பொழிந்தாள்
முனைப்புடனே அனுதினம் அவள் பாதம் பணிந்தேன்
இராகம்: திலங்
தாளம்: க.சாபு
No comments:
Post a Comment