துதித்தேன் அன்னையே....
பல்லவி
துதித்தேன் அன்னையே உன்னையே ஶ்ரீசாமுடீச்வரி
கதி நீயே காத்தருள்வாய் ஶ்ரீமகா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
உதிக்கும் கதிரவன் மதியோன் நரர்சுரர் முனிவர்கள்
மதிக்கும் ஈச்வரி சங்கரி கேசவன் சோதரி
சரணம்
எதிர்த்திடும் அரக்கரை வதைத்திடும் வலிவினள் காளி
ரதிபதி மயங்கிடும் அதிசய வடிவினள் பைரவி
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவள் ஆதிபராசக்தி
எதிலும் எங்கும் நிறைந்தவள் விச்வேச்வரி ஈசப்ரியசகி
தாளம்: ச.அடை
No comments:
Post a Comment