தாயே சாமுண்டீஸ்வரி
பல்லவி
தாயே சாமுண்டீஸ்வரி
நீயேயென்றும் என் துணை
அனுபல்லவி
மாயன் மரகதவண்ணன்
கேசவன் சோதரி
சரணம்
ஓயாது உன் நாமம் நினைத்திடும் மனமும்
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்
தந்தருள வேண்டியே தினமுனைப் பணிந்தேன்
தேயாத புகழ் மேவும் பூவனூர் தலம் வளர்
தாளம்:ரூபகம்
No comments:
Post a Comment