ஸ்ரீகண்ட-தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித
ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே
ஹாலாஹலம் என்னும் கொடிய விஷத்தை உண்டு, அதனை தனது கழுத்திலேயே நிறுத்திக் கொண்ட ஸ்ரீபரமேஸ்வரனின் புதல்வரே!, அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியே!, உபாஸிப்பவர்களுக்கு அஷ்ட-லக்ஷ்மிகளின் அருளைத் தருபவரே!, மஹா-லக்ஷ்மி நித்யவாசம் செய்யும் வில்வ பத்ரத்தால் பூஜிக்கப்படுபவரே!, தனக்கு மேல் ஒருவர் இல்லாத தலைவரே!, என்னுடைய குலத்தில் மஹாலக்ஷ்மி என்றும் நித்யவாசம் செய்யும்படி அருள்வாயாக !!
கணபதி நீயே.......
பல்லவி
கணபதி நீயே கனிந்தருள்வாயே
மணம் தரும் மலர் தூவி உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
வணங்கிடுமடியார்க்கு நலன் தரும் கரிமுகனே
தனம்தரும் திருமார்பன் கேசவன் மருகனே
சரணம்
ஆலகாலமுண்ட நீலகண்டன் மகனே
சீலமிகு திருவுறையும் வில்வமதில் பூசிக்கும்
கோலம் கொண்டவனே தனக்கு நிகரில்லாத
பாலனே என் குலம் தழைத்திட வேண்டினேன்