மங்கள விநாயகன்
பல்லவி
சங்கடமிடர் களையும் மகாகணபதியை
மங்கள விநாயகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறை சூடும் ஆனைமுகத்தோனை
சங்கும் சக்கரமுமேந்தும் கேசவன் மருகனை
சரணம்
பங்கய பதத்தானை பார்வதி மைந்தனை
செங்கதிரோனொளியையும் மிஞ்சுமொளியுடையவனை
சிங்காரவேலனின் மூத்தோனைக் கரிமுகனை
மங்காத புகழ் மேவும் வேழமுகத்தோனை
No comments:
Post a Comment