சிவன் மகன்
பல்லவி
நீயே துணை கணபதி என்றும்
சேயெனைக் கனிவுடன் தாயெனக் காத்தருளும்
அனுபல்லவி
ஞாயிறு ஒரு கோடி சேர்ந்துதித்தார்ப்போல
பாயுமொளியளிக்கும் பங்கயப் பாதனே
சரணம்
தீயினைக் கண்ணாக வைத்திருக்கும் சிவன் மகனே
மாயங்கள் செய்திடும் கேசவன் மருகனே
பாயிரம் பல பாடி பக்தர்கள் கொண்டாடும்
நோயிடர் வினை தீர்க்கும் ஆனைமுகத்தோனே
No comments:
Post a Comment