துதிக்கையன்
பல்லவி
துதிக்கையனே என்னைக் காத்தருள்வாய்
கதியென உனதிரு கழல் பணிந்தேன்
அனுபல்லவி
மதியின் பிறையணிந்த மதவாரணமுகனே
யதுகுல திலகன் கேசவன் மருகனே
சரணம்
புதிய கருமங்கள் தடையின்றி நடைபெற
உதவிடும் தேவனே விக்ன விநாயகனே
விதிவசத்தால் யான் படுந்துயர் நீக்கி
அதி விரைவில் வந்து அடைக்கலம் தந்து
No comments:
Post a Comment